வியாழன், 20 அக்டோபர், 2016

மனைவி என்ற காதலிக்கு





புத்தம் புது மனம் பெற்று..
பொன் மேனி விரல் தொட்டு,
"பூ" சூட வந்தேன்..
நல்லதாய் ஒரு "பூ"
சொல்லித்தா சிந்தனையே..
அவளுக்காய் சூடி வைக்க,

மஞ்சத்து மச்சத்தால்..!
துளிர் விட்ட தேவதைக்கு..
ஆராதனை செய்து வைக்க,
அறிய செயல் தேடி..
அலைகிறதேன் நெஞ்சம்,

மனமார்ந்து ஏற்று..
மன நிறை கொண்டு..
மாங்கல்யம் தந்து வைத்த..
மணப்பெண்ணே வா..
மல்லிகை "பூ" சூட..

விக்கித்தவிர்த்து..
விளையாட்டாய் வேண்டி..
வினை பெற்று வர,
வேட்க்கையில் வா..
தாழம்பூ நான் தர..

செவ்வரத்தம் பூவும்..
செந்நிற தேனும் தந்த..
சுவையோடு இதல்,


பிச்சிப்பூவும்..
தென்றல் காற்றும் தந்த..
வாசனை மேனி,

வாடா மல்லியும்..
வாடாங்கும் மேனியும் தந்த..
வனப்பூ..

அள்ளி அணைத்தால் கமகம்,

மனம் பெற்ற வாழ்வில் மகிழம்,

உறவோடு இருக்கையில் வாழை,

மஞ்சம் இட்ட நினைவில் மதுரம்,

மகிழ்ச்சியின் நெருக்கத்து மந்தாரை,

கானகத்து தேடலில் தும்பை,

காத்துக்கிடக்கையில் குறுஞ்சி,

செந்துருக்கு நெத்தியில் குங்குமம்,

பள்ளி கொண்ட பாடத்து செம்பருத்தி,

விக்கித்து நிக்கையிலே காந்தள்.

மொத்தத்தில்,

கட்டவிழ்ந்த நேரத்து..
நாணத்து சாமந்தி - இது,
மொத்த பூவும் அவளாகவே,

ஆகையால்..

நல்லதாய் ஒரு "பூ"

சொல்லித்தா சிந்தனையே..
அவளுக்காய் சூடிவைக்க. ( சீனி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக