வியாழன், 20 அக்டோபர், 2016

பட்டினம்











பட்டணம் போய் சேர்ந்தாலும்,
பட்டினம் - நீ மறக்காதே.!

பணத்துக்காக வாழ்ந்து - என்ன..?
பாசாங்கு பர்த்துபுட்டே.?

பந்தலிலே நீர் வச்சு
தாகம் தீர்க்க தந்தாலும் - நம்ம
பனங்காட்டு கொல்லைதாங்க - பத
நீர் தந்து தாகம் தீர்க்கும்..!!

வயலோரம் வரப்பு வச்சு,
வெள்ளரி பூ பூத்தாலும்...

வேலைக்கு உணவாகும்
வேலை இல்லா வினை போகும்..!!!

கோவை செடி கொள்ளையிலே,
கூட்டாச்சோறு சமைச்சு வச்சு,
குழைந்தையோடு கொஞ்சி பேசி
கொஞ்சமா நீ தின்னு பாரு..!

கருவேலன் தூரில் கண்ட...
கரு நாக பாம்பு பார்த்து,
கருவம் வச்சே அடித்திடுவான்
பட்டினத்து பசங்க தாங்க...!!

குளம் பார்த்து நீந்தி குளித்து..
காட்டு முயலும் - நாட்டு
கோழி கறியும்..
வேப்பமரத்து நிழலில் தின்னு,

பட்டினத்து பறவை பார்த்து..
கொஞ்சமா கண் மூடு.

பக்கத்து வீட்டிலுல்ல,
பழஞ்சோறு கஞ்சி கேட்டு..
உப்பு போட்டு குடித்துப்பாரு..
உன்னை நீ மறந்திடுவாய்..!!!

மூத்தவங்க மரியாதையும்..
முன்னோருங்க வம்சாவழியும்..
முன்னிறுத்தி பேசிப்பாரு,
உன்னைப்பற்றி தெரிந்திடுவாய்..!!

பாட்டியோடு பேசிப்பாரு..
வம்பிழுத்து சண்டை போடு - அவள்,
பேச்சை நெஞ்சில் நிறுத்து..
காலத்து கவிஞனாவாய்..!!

பட்டணத்து பேச்சு எல்லாம்...
பட்டினத்தை அடைந்தாலும்.

பட்டினத்து பேச்சுதாங்க,
பழமொழியா ஆச்சுதுங்க.  (சீனி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக