மழை துளி
ஒத்த மழை வழுக்கிறது..
அத்தைமகள் வெளியே வந்தால்..
ஒதுங்கி நின்றும் நனைகிறாளே..!
அத்தை பெத்த அகங்காரி - என்
அத்தை பெத்த அகங்காரி.
நெத்திசுத்தி உச்சந்தலையில்..
ஒன்று இரண்டு உருண்டோடி..
நொணிமூக்கு சென்றடைந்து..
உதட்டுக்கு உரமிட்டு..!
பொன்மேட்டில் தெறிக்கிறதே – அந்த,
பொன்மேட்டில் தெறிக்கிறதே,
இரண்டோடு மூன்றான..
மடிப்பில் நகை ஈர்க்கிறதே – அதில்,
சங்கமித்து உருண்டிடுமோ..?
இளைப்பாறி ஈடு தர – அவள்,
இளைப்பாறி ஈடு தர.
தன்னிச்சையாய் தாவிவந்து..!
ஆதங்க அறைக்குச்சென்று..!
ஒன்றாய் சிறகடித்து..
பஞ்சமித்த கரைசல்போல..!
ஒத்தசுகம் ஈட்டிடுமோ..?
நாபிச்சுழி உள்ளறையில் – அந்த,
நாபிச்சுழி உள்ளறையில். (சீனி)

seeni ali..
பதிலளிநீக்கு