திங்கள், 20 மார்ச், 2017

மழை துளி




மழை துளி










ஒத்த மழை வழுக்கிறது..

அத்தைமகள் வெளியே வந்தால்..
 
ஒதுங்கி நின்றும் நனைகிறாளே..!
 
அத்தை பெத்த அகங்காரி - என்

அத்தை பெத்த அகங்காரி.



நெத்திசுத்தி உச்சந்தலையில்..
 
ஒன்று இரண்டு உருண்டோடி..

நொணிமூக்கு சென்றடைந்து..

உதட்டுக்கு உரமிட்டு..!

பொன்மேட்டில் தெறிக்கிறதே – அந்த,
 
பொன்மேட்டில் தெறிக்கிறதே,



இரண்டோடு மூன்றான..
 
மடிப்பில் நகை ஈர்க்கிறதே – அதில்,

சங்கமித்து உருண்டிடுமோ..?
  
இளைப்பாறி ஈடு தர – அவள்,
 
இளைப்பாறி ஈடு தர.



தன்னிச்சையாய்  தாவிவந்து..!
 
ஆதங்க  அறைக்குச்சென்று..!
 
ஒன்றாய்  சிறகடித்து..
 
பஞ்சமித்த கரைசல்போல..!
 
ஒத்தசுகம்  ஈட்டிடுமோ..?
 
நாபிச்சுழி உள்ளறையில் – அந்த,
 
நாபிச்சுழி உள்ளறையில். (சீனி)
 

1 கருத்து: