செவ்வாய், 21 மார்ச், 2017

இது எங்கள் “கிராமம்”



கிராமம்

 
1,உங்கள் தலைவர்கள் கனவு போன்ற வாழ்க்கை வாழ்ந்து வரும் நேரம், எங்கள் கிராம மக்கள் மட்டும், கனவில்மட்டுமே வாழ்வார்கள். ஆனாலும், வருத்தமில்லை.  இது எங்கள் “கிராமம்”


2,  உங்கள்  தலைவர்களின் வீட்டு பங்களாக்களின் பாத்ரூம் பரப்பளவை 
விட, எங்கள் கிராமத்து குடிசைகளின் பரப்பளவு மிகவும் சின்னது. ஆனாலும், கூணி..குறுகி.. வாழ்ந்ததில்லை.  இது எங்கள் “கிராமம்”



3,  உங்கள் தலைவர்களின் வயிறு குறைய கஷ்டப்பட்டு  வாக்கிங்  போவார்கள், எங்கள் கிராம மக்கள் அவர்கள் வயிறு நிறையவே கஷ்டப்படுகிறார்கள் இருந்தும், பசியோடில்லை.  இது எங்கள் “கிராமம்”



4,  உங்கள் தலைவர்கள் அவங்க  கிரெடிட் கார்டுகளை நம்பி வாழ்வார்கள், எங்கள் கிராம மக்கள் ரேஷன் கார்டுகளையே நம்பி  இருக்கிறார்கள். ஆனாலும், அவதியில்லை.  இது எங்கள் “கிராமம்”



5,  உங்கள் தலைவர்கள் உண்ணும்  நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன்விலையில், எங்கள் கிராம மக்கள் ஒருகுடும்பம் ஒருமாதம் சாப்பிடலாம். ஆனாலும், வருந்தியதில்லை.   இது எங்கள் “கிராமம்”


6,  உங்கள் தலைவர்களின் இருப்பிடத்தில் பகலில்கூட ஏசிஓடும், எங்கள் கிராம மக்கள் வீடுகளில், இரவில்கூட விளக்கு எரியா வீடுகளும் உள்ளன, ஆனாலும்,  விழாக்கோலம்  நிறைந்திருக்கும்.  இது எங்கள் “கிராமம்”



7,  உங்கள் தலைவர்களின் காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார், எங்கள் கிராமத்தில் ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சு போவோம். ஆனாலும்,  தொல்லையில்லை.  இது எங்கள் “கிராமம்”



8,  உங்கள் தலைவர்களின் குடும்ப கல்யாணத்துக்கு பண்ற செலவுல பாதியைக்கூட எங்களின் வாழ்நாள் முழுக்க கிராமத்தில் சம்பாதிக்க முடியாது.  ஆனாலும்,  எங்கள் மகிழ்சிக்கு பஞ்சமில்லை.  இது எங்கள் “கிராமம்”


 
9,  உங்கள் தலைவர்களின் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு, எங்கள் கிராமத்து ஒருவருட ஊதியம். ஆனாலும், இதுவரை வருந்தியதில்லை.  இது எங்கள் “கிராமம்”


10,  உங்கள் தலைவர்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட, எங்கள் கிராமத்தில் பல பெண்களிடம் சேலைகள் இல்லை. ஆனாலும், அவமரியாதை செய்ததில்லை.  இது எங்கள் “கிராமம்”  (சீனி.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக